Tuesday 7th of May 2024 05:39:02 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கு - கிழக்கில் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் த.தே.கூட்டமைப்பு, த.தே.ம.முன்னணி விமர்சனம்!

வடக்கு - கிழக்கில் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் த.தே.கூட்டமைப்பு, த.தே.ம.முன்னணி விமர்சனம்!


தியாகி திலீபன் நினைவேந்தலுக்குத் தடை என்ற பெயரில் தமது கட்சி உறுப்பினர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தமது கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் இன்று காலை மட்டக்களப்பு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது.

இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல பல மாவட்டங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, வவுனியாவில் இருந்து நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவாலயம்நோக்கி தமிழ் கட்சிகளின் இளைஞரணியினர் ஏற்பாடு செய்திருந்த நடை பயணத்துக்கு நீதிமன்று நேற்று முன்தினம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நடைபயணம் ஆரம்பமாகவிருந்த வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக பெருமளவான பொலிஸார் நேற்று களமிறக்கப்பட்டுக் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இதேபோன்று வழக்கு, கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவொரு கட்சியினரோ, அமைப்புக்களோ தியாகி திலீபன் நினைவேந்தலை நடத்த முடியாதவாறு நீதிமன்ற தடை உத்தரவுகளை பொலிஸார் பெற்றுவருவதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE